The issue regarding delay payment of scholarship amount by Adi Dravida Department to SC ST students studying in educational institutions. 2day writ petition moved by All India Private Educational Institutions Associations represented by K.Palaniappan seeking to release the amount to their association members and also to frame guideline time limit for future scolorship claims came up before Justice Ravichandra Babu and after hearing Government counsel took notice and directed to file their response within 4 weeks. For petitioner Mr. E.Vijay Anand Advocate appeared
தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை நிலுவையை உடனே தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்க பொதுசெயலாளர் பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்க கூடிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாநில ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப் படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்..கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்ணங்களும் அரசே செலுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அரசு செலுத்தவில்லை என்றும், தற்போது வரை நிலுவையில் உள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.. எனவே உடனடியாக நிலுவையில் உள்ள கல்விக் கட்டணத்தை தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் தர வேண்டும் மேலும் இது போல கல்வி கட்டணத்தை திருப்பித் தருவதற்கான கால நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த வழக்கில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திர பாபு வழக்கு குறித்து நான்கு வாரத்துக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.